ஒன்று;
அதென்ன இமாம் அலி? –
கண்ணியமிக்க குலபாயேராஷிதீன்களில் இமாம் அலி அவர்களை மாத்திரம் இமாம் என்றும் ஏனைய கலீபாக்களை இமாம் என்று அழைக்காத எனது செயலுக்கான காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ், நான் அவதானித்த காரணங்களை ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
இலங்கையின் சுன்னி பாரம்பரியத்தில், இமாம் ஷாபி மத்ஹபில் இமாம்களாக இமாம் அலி, இமாம் ஹசன், இமாம் ஹுசைன் ஆகியோரை கௌரவத்துடன் அழைப்பதை அவதானித்திருக்கிறேன். இன்றும் கூட ஒவ்வொரு ஜூம்மாஹ்விலும் இரண்டாம் குதுபாவில் கதீபினால் இந்த மரியாதை வழங்கப்பட்டே அந்த மகான்களின் பெயர்கள் விளிக்கப்படுகின்றன.
இமாம் அலியை இமாமாக ஏற்க மறுப்பவர்களிடம் தயவுடன் உதவியொன்றை எதிர்பார்க்கிறேன். நான் பதிகின்ற பதிவுக்கு நிகரான சம்பவமொன்றை நீங்கள் உங்களது இமாமாக அல்லது தலைவராக கணிக்கும் தலைவரிடமிருந்து எனக்கு சுட்டிக் காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ்- நான் எனது இமாமை மாற்றிக் கொள்கிறேன்.
நபிகளார் மதீனாவுக்கு வந்ததன் பின்னர் மக்களுக்கு தாங்கள் நபியவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக் கொள்ள அவசியம் இருந்தது. அதனால், அவர்கள் எவ்வேளையும் நபிகளாரை சந்தித்து மார்க்க விடயங்களை கேட்டுக் கொண்டேயிருந்தனர். சிலர் இரகசியமாக உரையாட விரும்பினர். உரையாடியும் வந்தனர். இவர்களில் உண்மையாளர்கள் யார் போலியாக வருபவர்கள் யார் என்று பிரித்தறிய கடினமாக இருந்தது. நபிகளாரும் அனைவருக்கும் இன்முகத்துடன் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். என்றாலும், மக்களின் இச்செயல் நபிகளாருக்கு இடைஞ்சலாக இருந்தது. இந்நிலையில் அல் குர்ஆன் ஆயத்தொன்று நபிகளாருடன் இரகசியமாக கதைக்க விரும்புபவர்களை இலக்கிட்டு இப்படி அருளப்பட்டது.
“58:12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.”
இந்த கட்டளையின் மூலம் யாராவது நபிகளாருடன் இரகசியம் பேச விரும்பினால் அவர் அவரது அச் செயலுக்கு முன்னர் தர்மம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவானது. உண்மையில் மார்க்கம் கற்றுக் கொள்ள அல்லது நபிகளாருடன் தனிமையில் உரையாட விரும்பும் ஒருவருக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால், தாம் நபியவர்களுக்கு நெருக்கமானவர்கள் என மக்களுக்கு காட்டிக் கொள்ளும் நோக்குடன் இருந்தவர்களுக்கு பொருள் இழப்பை கொண்டு வரும் இந்த சட்டம் கடுமையானதாக இருந்தது.
இந்த ஆயத் அருளப்பட்டதன் பின்னர் நபிகளாருடன் இரகசியமாக அல்லது தனிமையில் பேச முண்டியடித்த மக்கள் அனைவரும் ஒதுங்கி விட்டார்கள். யாருமே நபிகளாருடன் தனிமையில் கதைக்க அல்லது இரகசியம் பேச முன்வரவில்லை. நபிகளார் பொதுவாக கதைக்கும் கூட்டங்களுக்கு மட்டுமே மக்கள் வந்து போகத் துவங்கினர். ஆனால், இந்த ஆயத் அருளப்பட்டவுடன் இமாம் அலி அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். தன்னிடமிருந்த தங்க நாணயமொன்றை பத்து திர்ஹம்களாக மாற்றினார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு திர்ஹத்தை தர்மம் செய்தார்கள். பின்னர் தனிமையில் நபிகளாருடன் உரையாற்றினார்கள்.
அல் குர்ஆனின் இந்த ஆயத் விதித்த சட்டத்தின் பிரகாரம் செயல் படுகின்ற பாக்கியத்தை இமாம் அலி மாத்திரமே பெற்றார்கள். இதனைக் குறித்து இமாம் அலி அவர்கள் இப்படி கூறுவார்கள்.”அல்லாஹ்வின் வேத கிரந்தத்தில் ஒரு ஆயத் இருக்கிறது. எனக்கு முன்னர் ஒருவரும் அதன் பிரகாரம் செயல்படவில்லை. எனக்குப் பிறகு ஒருவருக்கும் அதன்படி செயல்பட கிடைக்கவுமில்லை. என்னிடத்தில் ஒரு தீனார் (தங்க நாணயம்) இருந்தது. அதனை நான் மாற்றிக் கொண்டேன். நபியவர்களிடம் நான் தனித்துப் பேசும் பொழுதெல்லாம் ஒரு திர்ஹம் தர்மம் செய்தேன். நற்குணங்களில் ஏதேனும் ஒரு நற்குணத்தைப் பற்றி நபிகளாரிடம் விசாரித்துத் தெரிந்துக் கொள்வேன்.”
பத்து நாட்கள் கடந்தவுடன் இந்த சட்டத்தை மாற்றிவிடும் அடுத்த ஆயத் அருளப்பட்டது.
“58:13. நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) வழிப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.”
இந்த ஆயத் அருளப்பட்டவுடன் நபிகளாருடன் தனித்துப் பேசுவதற்கு முன்னர் தர்மம் செய்ய வேண்டும் என்றிருந்த விதி நீக்கப்பட்டது.

Comments
Post a Comment