மூன்று
குலபாயேராஷிதீன்களில் அமீருல் மூமினீன் இமாம் அலியின் பெயர் வருகின்ற இடங்களில் நான் மரியாதையாக இமாம் என்று குறிப்பிட்டு வந்தேன். இமாம் அலியை எனது ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். கண்ணியமிக்க முதல் மூன்று கலீபாக்களைவிடவும் இமாம் அலி எவ்விதம் முக்கியத்துவம் பெறுகிறார் என்று குழம்பிய சிலர் காரணம் கேட்டார்கள். அதற்கான விளக்கப் பதிவுகள் ‘பதில் தேடும் பட்டிமன்ற சிறப்புப் பதிவுகளாக’ பதிவேறுகிறது.அன்னை ஆயிஷா ஸலாமுன் அலைஹா அறிவிக்கிறார்கள். ‘ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூடியிருந்த சஹாபாக்களை நோக்கி ‘நான் உங்களை அறபுகளின் தலைவரின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கிறேன்.’ என்றார்கள். அதனைக் கேட்ட நான் ‘யா ரசூலுல்லாஹ்......நீங்கள் அறபுகளின் தலைவர் இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘நான் முழு மனித குலத்தினதும் தலைவன். அலி அறபுகளின் தலைவராக இருக்கிறார்.’ என்று சொன்னார்கள்.’
இந்தப் பதிவு ஹாகிம் அல் முஸ்தத்ரக் கிரந்தத்தில் பதிவாகியிருக்கிறது.
Comments
Post a Comment