Posts

Showing posts from May, 2023

முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஏழு- (இமாம் மஹ்தி தொடர்- 01)

Image
இன்று பாதுகாப்புப் பெறவேண்டிய சக்கூம் நச்சுக் கனிகள்....... ஹதீக்கத்துள் மவ்த்தின் -மரணப் பூங்காவின்-மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்.....????? முதலாம் கலீபாவின் இரண்டு வருடமும் மூன்று மாதங்களும் மட்டுமே நீடித்த மிகக் குறுகிய இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்றில் ஜீரணிக்க முடியாத பல கசப்பான நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுடனான யுத்தம். இஸ்லாத்தை விட்டும் வேறு மதங்களுக்கு மாறிய முர்தத்துக்களுடனான யுத்தம். பொய் நபிமார்களுடனான யுத்தம் என்பன முக்கியமான பிரச்சினைகளாக எமக்கு சொல்லித் தரப் பட்டன.

முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஆறு! (இமாம் மஹ்தி தொடர்-01)

Image
  நுழையும் முன்னர்: ஜூன் மாதம் வருடம் 2021. அந்த மாதத்தில் முதலிரண்டு வாரங்களில் யாருக்கும் தெரியாத ஒரு நாளில் இருபத்து இரண்டு வயதான இளைஞன் ஒருவனின் தலையை சவூதி அரசாங்கம் இரகசியமாக துண்டித்துப் போடுகிறது. இரவு பிரதான செய்தி தொலைக்காட்சியில் வருகிறது. உள்துறை அமைச்சு அந்தக் கொலையை இஸ்லாமியக் ஹிராபா குற்றவியல் தண்டனைப் பிரிவில் நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை சமர்பிக்கிறது. அப்பொழுதுதான் அந்த இளைஞனின் குடும்பத்துக்கே விசயம் தெரிகிறது.

முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஐந்து- (இமாம் மஹ்தி- தொடர் 01)

Image
  நுழையும் முன்னர்: அல் குர்ஆணில் சூறா மாயிதா ஆயத் இலக்கம் 33 நிஜமாகவே எதனைக் குறித்துப் பேசுகிறது என்ற எங்களுடைய இந்த ஆய்வுப் பயணத்தில் என்னுடன் கூடவே பயணிக்கும் உங்களுக்கு முதற்கண் நன்றி.

முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் நான்கு- (இமாம் மஹ்தி தொடர் 01)

Image
  நுழையும் முன்னர்: சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு பதிவு. தலைப்பு 'ரணகள 'ஆலிம்'களின் செவலையில் கொம்பெடுத்து திமிரைத்தான் அடக்குதல்'...... அல் குர்ஆணின் போதனைகளுக்கும், போதனைகளின் விளக்கவுரையாக நாம் கருதும் ஹதீஸ் அறிவிப்புக்களுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாட்டை பேசுகின்ற பதிவது. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை மிகக் கொடூரமான தலைவராகக் விபரிக்கும் பல கதைகள் ஹதீஸ்கள் என்று ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. அத்தகைய ஹதீஸ்களில் பிரபலமானது ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) தீர்ப்பளித்த தண்டனை. அந்த ஹதீஸில் நியாயம் காணும் இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றில் தவறிருப்பதாக நான் சொல்லத் துவங்கினேன். அதில் ஒரு செய்தியை இறுதியில் கூறியிருந்தேன்.

முள் காட்டில் பூக்களும் உண்டு! அத்தியாயம் மூன்று - (இமாம் மஹ்தி தொடர் 01)

Image
  நுழையும் முன்......... சில வருடங்களுக்கு முன்னர் காலை நேரமொன்றில் நண்பரொருவர் அலைபேசியில் வந்தார். "பயாஸ்..... அஸாத் மௌலானா மௌத்தாம். ஜனாஸா வெலிகமையில் இருக்கிறதாம். என்னால் போக முடியாத சூழல். முடிந்தால் போய்வாருங்கள்" என்றார். கேட்டவுடன் அதிர்ந்துப் போனேன். எனக்கு அல் குர்ஆணின் பல ஆயத்துக்களுக்கு விளக்கம் சொல்லிக் கொடுத்த பல இஸ்லாமிய அறிஞர்களில் இந்த அஸாத் மௌலானாவும் ஒருவர். இவர் மிக முக்கியமானவர். கொழும்பு வரும் நேரமெல்லாம் வீடு தேடி வருவார். ஒன்றாக வெளியில் செல்வோம். கூடவே நம்முடன் சில ஏழைகளையும் அழைத்துக் கொள்வார். உயர்ரக ஹோட்டல்களில், கே.எப்.சி., மெக்டோனால்ட்ஸ் உணவகங்களில் உற்சாகமாக உணவுண்ணுவோம். பணத்தை அவரே கொடுப்பார்.

முள் காட்டிலும் பூக்கள் உண்டு- அத்தியாயம் இரண்டு (இமாம் மஹ்தி தொடர் 01)

Image
  உஸ்தாத் மன்சூரும் நானும்! நேற்று நண்பரொருவர் அழைப்பெடுத்தார். என்னுடைய பதிவொன்றை விமர்சித்தார். (பதிவை பின்னூட்டலில் இணைக்கிறேன்)அந்தப் பதிவில், அல் குர்ஆணின் வசனங்களை சவாலுக்கு உட்படுத்திய ஞானசார தேரரின் கேள்வி ஒன்றையும், அதற்கு அல் குர்ஆணின் அடிப்படையிலும், அஸ் ஸுன்னாவின் ஒளியிலும் பதில் தந்த ஜம்மியத்துல் உலமாவின் கருத்தையும் பதிந்திருந்தேன். அழைப்பெடுத்த நண்பர் "உங்களுடைய கேள்விகளுக்கு உஸ்தாத் மன்சூர் பகிரங்கமாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த ஒரு அவையில் பதில் சொல்லி விட்டார். உங்களுக்கு அது தெரியாதா?" என்று கேட்டார். "எப்பொழுது?" என்றேன். "கொஞ்சம் பொறுங்கள்" என்றார் . சில வினாடிகளில் 2019 செப்டம்பர்" என்றார். "ஞானசார தேரர் இந்தக் கேள்விகளை 2012 லேயே கேட்கத் துவங்கி இருந்தாரே.......... அதற்குப் பதில் சொல்ல இத்தனை வருடங்கள் தேவைப்பட்டதா?" என்ற நான் "அதாவது.....இஸ்லாம் என்று நம்பி வழித்தவறிய ஸஹ்ரானின் கூட்டத்தினரின் தற்கொடை அழிவுக்குப் பின்னர்.......அவசர அவசரமாக இப்படி பதில் சொல்லி இருக்கிறார். இல்லையா?" என்றேன்.

முள் காட்டிலும் பூக்கள் உண்டு! ஒன்று! (இமாம் மஹ்தி தொடர்- 01)

Image
செவலையில் கொம்பெடுத்து ரணகள ஆலிம்களின் திமிரைத்தான் அடக்குதல்'....... தலைப்பு புரிகிறதா? (புரியாதவர்களுக்கு கடைசி பாராவில் விளக்கம் இருக்கிறது.) வருடம் இரண்டாயிரத்து பதின்நான்கு. இடம் சுகததாஸ உள்ளரங்கு. அங்கு பொதுபலசேன மஹா சங்க சமலுவ என்ற பெயரில் பௌத்த மக்களை ஓரணியில் திரட்டும் மாபெரும் உலகளாவிய ஒன்றுகூடல் நடைபெறுகிறது.சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பௌத்த துறவிகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். பௌத்த பொதுமக்களும் அரங்கில் நிறைந்திருந்தார்கள்.பல தொலைகாட்சி நிறுவனங்கள் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்தார்கள். அது தவிர, சமூக வலைத்தளங்களிலும் நிகழ்ச்சி நேரடியாக உலக மக்களை வந்தடைந்தன. இன்றுவரை இணையங்களில் உயிர்ப்புடன் ஜீவிக்கின்றன. முறையாக பதில் சொல்லாத நிலையில், எதிர்கால முஸ்லிம் சந்ததிகளை மீண்டும் சந்திக்கு இழுக்கப்போகின்றன.